குறள்

Standard

ஏறக்குறைய 3 ஆண்டுகள் மேம்பாட்டிற்குப் பிறகு ஓம்தமிழின் வெளியீட்டாகக் குறள் செயலியின் முதற்பதிப்பை ஆப்பிள், கூகிள் செயலி சந்தையில் வெளியிடுவதில் முல்லையும் நானும் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

இச்செயலியின் BETA பதிப்பை செப்தம்பர் 2013 இல் வெளியிடும்போது, திருக்குறளை ஆய்வு செய்வோர்களுக்கு உடனடி தேடல் (AJAX Search) செயலியல்புகளை முதன்முறையாக உருவாக்கினோம். திருக்குறளில் எண், சொற்களை எங்கு வேண்டுமெனிலும் எளிமையாகத் தேடுவதற்கு உதவியது. குறளின் விளக்கவுரையில் பல உரையாசிரியர்களின் உரையையும் தொகுத்திருந்தோம். ஆண்டிராய்டு கூகிள் சந்தையில் கட்டற்ற மென்பொருளாக இதனை வெளியிட்டிருந்தோம். தமிழா குழுவின் ஒருபகுதியாகக் கிட்டப் (GitHub) களஞ்சியத்தில் அதன் மூலநிரல்களைப் பகிர்ந்திருந்தோம். பங்களிப்பின்மையாலும் வேலைப்பளுவாலும் நீண்ட நாட்களாக இத்திட்டம் கிட்டப்பில் கிடப்பில் தான் இருந்தது. அதற்குள் இதனை உருவாக்கிய மென்பொருள் நுட்பமே மாறிவிட்டதால் பழையச் செயலியை நீக்க வேண்டியதாயிற்று.

புதிய அமைப்புகளுடனும் மேம்படுத்திய உள்ளடக்கத்துடனும் மீண்டும் இச்செயலியை முழுமையாக உருவாக்க எண்ணி இப்பொழுது முதற்பதிப்பை முடித்துள்ளோம். இத்திட்டத்தில் மேலும் பல ஆக்கங்களை உருவாக்கி வருகிறோம். இனி வரும் பதிப்பில் விரைவில் ஒவ்வொன்றாக வெளியிடவும் முயல்வோம்.

குறள் செயலியை உங்கள் Android/iOS கருவிகளில் பதிவிறக்க : http://omtamil.com/kural

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.