Kuralism

Standard

திருவள்ளுவராண்டு ௨௦௫௦ பொங்கல் தமிழ்ப்புத்தாண்டில் இன்னொரு புதிய செயலில் நானும் முல்லையும் ஈடுபட்டுள்ளோம்.

திருக்குறள் உலகப் பொதுமறை, அனைத்து மாந்தருக்கும் ஏற்புடைய வாழ்வியல் வழிகாட்டி. பல அறிஞர்கள் குறளின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்துள்ளனர், பல்வேறு ஆக்கங்களையும் செய்துள்ளனர்.

எனினும் இன்னும் உலகளவில் குறள் பரவலாகப் பகிரப்படவில்லை. திருவள்ளுவர் உலகப் புகழ்பெற்ற மெய்யியலாலர் வரிசையில் இடம்பெறவில்லை. குறள் போன்ற உயர்ந்த சிந்தனை மற்ற மொழியில் இயற்றப்பட்டிருந்தால் அம்மொழி இனத்தினர் புகழ்ந்து போற்றி உலகறிய செய்திருப்பர்.

வெறும் புலம்புவதில், குறைக்கூறுவதில் எங்களுக்கு என்றுமே உடன்பாடில்லை. எங்களால் இயன்றதை என்றும் முழுமனதோடு செய்துள்ளோம். இந்த 7 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை ஓம்தமிழ் வழி செய்துள்ளோம். தொடர்ந்து செய்துவருகிறோம்.

குறளை உலகளவில் எடுத்துச் செல்லும் முயற்சியாக Kuralism.com எனும் இணையத் தளத்தைத் தொடங்கியுள்ளோம். PWA (Progressive Web App – வளர் வலைச் செயலி) எனும் புதிய நுட்பத்துடன் இத்தளம் முழுமையும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

https://kuralism.com தளத்தைக் காணவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.