பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு

Standard

தமிழுறவுகளுக்கு பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்து.

ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங் கவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன் நேர் இலாத தமிழ்  (பழம்பாடல்)

மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி.

இவ்வுலகில் உயிர்வாழ காற்றும் உணவும் தேவை. இவை இரண்டும் உருவாக கதிரவன் தேவை. ஆதலால் இந்நாளில் உலக இருளகற்றும் கதிரவனுக்கு நன்றியுடன் பொங்கலிடுகிறோம்.

மலரும் திருவள்ளுவராண்டு ௨௰௪௯-இல், உள்ள இருளகற்றும் தமிழ்மறை திருக்குறள்வழி  மாந்தநேயம், உயிர்நேயம், இயற்கை நேயத்தை நம் வாழ்வினில் பொங்க விடுவோம்; உயர்வோம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன