வாணிகம்

Standard

தமிழ்ப்புத்தாண்டில் புதிய முயற்சியினை மேற்கொள்வது எனக்கும் முல்லைக்கும் வழக்கம். ௨௰௪௩ தமிழ்ப்புத்தாண்டில் (2012) ஓம்தமிழ் இணையச் சேவையை தொடங்கினோம். ௨௰௪௮ தமிழ்ப்புத்தாண்டில் (2017) ஒட்பம் நுட்ப நடுவம் அமைத்தோம். இன்று  ௨௰௪௯ தமிழ்ப்புத்தாண்டில் (2018)  வாணிகம் இணையச் சந்தைத் தளத்தினை அறிமுகப்படுத்துகிறோம்.

இணையவழி வாங்கல் விற்றல் 90களின் இருந்து உலகம் முழுவதும் இருந்து வருகிறது. இருப்பினும், அண்மைய சில ஆண்டுகளில் உள்ளூர்,  உலக நிறுவனங்கள், தொழில்முனைவோர்,  நுகர்வோரிடமிருந்து இணைய வணிகம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

உலக இணைய வணிகச் சந்தைகளில் சில்லறை விற்பனையாளர்கள் இன்னும் மூன்றாண்டுகளில் 78.4% அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இணையவழி சந்தைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இணைய வணிக அதிகரிப்புக்கான காரணங்களில் ஒன்று சந்தைகளின் தொடர்ச்சியான வளர்ச்சியும் ஆகும்.

வாணிகம்.காம் இணைய வணிகச் சந்தையினை மலேசியாவிலிருந்து தொடங்குகிறோம். தற்போது சிறு நடு தொழில் முனைவோர்கள் பல்வேறு பிரிவுகளில் தங்களின் பொருட்களை இணையத்தில் விற்பனைச் செய்ய இத்தளம் உதவுகின்றது.

மலேசியாவில் 4 (ஆங்கிலம், மலாய், தமிழ், சீன) மொழிகளில் வழங்கும் முதல் இணைய வணிகச்சந்தை தளமாகவும் திகழ்வதில் மகிழ்கின்றோம். ஆப்பிள், கூகிள் ஆண்டிரோய்டு கருவிகளில் செயலியாகவும் வெளியிட்டுள்ளோம்.

Wanigam.com தளத்தில் மேல் காண்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன